Wednesday, May 23, 2012

கோவில்பட்டி சங்கமம்

பால்யம் என்றும் இனிமையானது தான்.மனம் எப்போதுமே பால்ய நினைவுகளில் நீந்தும் போது துள்ளிகுளிக்கதான் செய்கிறது.இயந்திரதனமான வாழ்க்கையில் மனம் சோர்வுறும்போது பழைய நண்பர்களை தேடுகிறது. வங்கி வூழியர் சங்க மாநாட்டில் பழைய நண்பர்களை பார்க்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சி மனசில் கொப்பளிக்கிறது.இப்படிதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநாட்டில் எங்களோடு பணிபுரிந்த ஜெயந்தி மற்றும் ஆன்சிலா ஆகியோரை சந்திக்கும்போது கோவில்பட்டியில் பணிபுரிந்த பழைய நண்பர்கள் எல்லோரும் சந்திக்க ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்களேன் நாதன் என்று சொன்னபோது மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்பட்டது.ஆஹா ..இப்படி ஒரு ஏற்பாட்டை ஏன் நாம் பண்ணகூடாது என்று நண்பர் ஆறுமுகத்திடமும் ஆண்டியப்பனிடமும் கேட்டேன். அவர்களும் சந்தோசமாக பண்ணலாமே என்று சொன்னதும் மனம் அசைபோட துவங்கியது. கோவில்பட்டி சங்கமம் விதையாக மனசில் வூன்றியது அன்றுதான்.

உடனடியாக எங்கள் வழிகாட்டியும் இனிய தோழருமான பால்வண்ணம் அவர்களிடம் இது குறித்து பேசினோம்.அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.பழய கோவில்பட்டி நண்பர்கள் அனந்தசங்கர், எஸ்.பெருமாள், லோகநாதன்,சரவணகுமார்,ஜோ பெர்னாண்டோ ,சுவாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நண்பர்கள் கூடி பழய நண்பர்களின் முகவரி மற்றும் மொபைல் எண்களை சேகரிக்க ஆரம்பித்தோம். சில நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி ஏப்ரல் இருபத்து ஒன்பது நாம் கோவில்பட்டி நகரில் சந்திக்க இருக்கிறோம் என்று சொன்னபோது அவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்.சென்னையில் இருந்தும் திருவனந்தபுரத்தில் இருந்தும் ரயிலுக்கு ரிசெர்வ் செய்து விட்டதாக ஜெயந்தி , ஆன்சிலா மற்றும் லதா தெரிவித்தார்கள். கோவில்பட்டியில் எங்கள் முன்னோடி தளபதி கோபாலகிருஷ்ணன் , வெற்றிலை ரசனை கொண்ட எங்கள் அன்பு நைனா முத்துவரதராஜன் ஆகியோர் தங்கள் வருகையை உறுதிபடுத்தி கொண்டார்கள்.
நண்பர்கள் லிஸ்ட் பெருகிக்கொண்டே போனது. கட் ஆப் வருஷம் எழுபத்தெட்டு என்பது போய் வர விருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் வரட்டும் என்று தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.
பழைய புகை படங்களை சேகரிக்க ஆரம்பித்தோம்.திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர் பாலசுப்ரமணியன் தனது புகைப்பட பொக்கிசங்களை தபாலில் அனுப்பிவைத்தார்.சென்னையில் இருந்து சுவாமிநாதன், முரளி, கோவில்பட்டியில் இருந்து ரெங்கநாயகி, திருவனந்தபுரத்தில் இருந்து லதா என போட்டோக்கள் குவிந்தன.பழய புகைப்படங்களை பார்க்கும்போதே என் மனம் பழைய உலகிற்கு சென்று விட்டது. அட எனக்கு கூட தலையில் இவ்வளவு முடி இருக்கிறதா என்று சிரித்து கொண்டேன்.(எந்த படம் என்று கேக்காதீர்கள்..)

சாப்பாடு ஏற்பாடுகளை ஆண்டியப்பனும் வள்ளியும் கவனித்துகொண்டர்கள்.எங்கள் அன்பு தோழர் மில்க் ராமசுப்பு இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை..ராஜ்மஹால் மண்டப உரிமையாளர் ராஜேந்திரனை சந்திக்க ஏற்பாடு செய்தார். வழக்கமான வாடகையில் நான்கில் ஒரு பங்கு மட்டும் கொடுங்கள் போதும் என்று அவர் சொல்லி விட்டார். பழய , மிக பழய நண்பர்களும் கூட வருவதற்கு ஆர்வம் காட்டியது தான் எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
முதல் நாள் இரவு நண்பர் ஆறுமுகம், ஜெயசிங் , மற்றும் கோவில்பட்டி தோழர்கள் உதயசங்கர், சாரதி, ரெங்கராஜன் ஆகியோர் கண்காட்சி ஏற்பாடுகளை விடிய விடிய செய்தோம்.இரவு வள்ளிநாயகம் வீட்டில் அருமையான விருந்து சாப்பாடு...

இருபத்து ஒன்பது காலை ...
நண்பர்கள் ஒவ்வொருவராய் அவரவர் குடும்பத்தோடு வர ஆரம்பித்தார்கள்.எங்கும் ஒரே உற்சாகம்..பழைய நண்பர்களை பார்த்த உடனே தழுவி கொண்டார்கள்.வேறு எந்த கிளையிலும் இது சாத்தியமா என்று தெரியவில்லை..(இன்னும் வரும் ...)

5 comments:

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

kumaraguruparan said...

ஒருமுறை ஸ்டேட் வங்கி ஊழியர்தளபதி கோபாலகிருஷ்ணன் அவர்கள்அச்சுப்போன்றகையெழுத்தில் எழுதிய அஞ்சல் அட்டை குமுதம் இதழில் பிரசுரிக்கப்பட்டு பலரின் பாராட்டையும் பெற்றது நினைவுக்கு வருகிறது!...ஸ்டேட் வங்கி கோவில்பட்டி கிளை பல ஆளுமைகளை உருவாக்கியது!...வேறு எந்த வங்கிக் கிளையிலும் பார்க்க முடியாத பாசப்பிணைப்பை இங்கு காணலாம். ஜே சி டி யு (அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு) சார்பாக ஒருநாள் ஸ்டேட் வங்கி...இன்னொரு நாள் அரசுத் துறை விவசாய ஆபிஸ், தாசில்தார் அலுவலகம், அஞ்சலகம் என்று நண்பர்கள் தோழமையுடன் கூடி கோஷம் இடுவார்கள்...மாலையில் பண்பாட்டு-கலை இலக்கியம் தொடர்பான மயிர் பிளக்கும் விவாதங்களிலும் ஈடுபடுவார்கள்!...முன்னாள் நெல்லை மாவட்டத்தின் பகுதியாக இருந்தது ;என்றாலும் வளத்தைஉணர்த்தும் நெற்பயிரே காணப்படாத, பருத்தியும் இலந்தையும் விளையும் கந்தக பூமி! தண்ணியில்லாக்காடு என்று ஒருகாலத்தில் 'தண்டனையாக' இங்குமாற்றப்பட்டவர்கள் பலர். ஆனால் இங்குள்ளஇளைஞர்களிடம் லட்சிய வெறி உண்டு என்பதற்குப் பல ஆளுமைகள் உதாரணங்கள் ஏராளம். நான் ஒன்றாம் வகுப்பு படித்தது இங்குதான்...கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டின் போது மீண்டும் கழுகுமலையிலிருந்து கோவில்பட்டிக்கு இடம் பெயர்ந்தோம்.விடுமுறைக்கு மட்டும் வருவேன்...கல்லூரி முடிந்தபின் சென்னை அஞ்சல் துறையில் பணியாற்றியபோது ஆண்டுக்கு ஒருமுறை இருமுறை வரும்போது மட்டுமே நண்பர்களை சந்திப்பது என்பதாக இருக்கும்.... "ரௌத்திரம் பழகு" என்பதை கோவில்பட்டியில்தான் கற்றுக் கொள்ள வேண்டும்!

sathyamani said...
This comment has been removed by the author.
thamirabarani said...

வணக்கம்..தோழர்...தங்களின் தளத்தை வாசித்தாலும்..இந்த கோவில்பட்டி..என்ற வார்த்தை இன்னும் நெருக்கமாகி..வசிக்க வைத்தது..பழைய புகைப்படங்களை கைகள் ஸபரிசிக்கும் போது..அந்த சின்ன நிமிடங்களில் வாழ்கிறோமே ஒரு வாழ்க்கை..அப்பா..எப்படி..சொல்ல...தாலட்டும் நினைவுகள் தோழர்....வாழ்த்துக்கள் மணிகண்டன் ஹலோ பண்பலை

thamirabarani said...
This comment has been removed by the author.