Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Sunday, November 2, 2014

அவர் தான் தொ.ப.



தெற்கு பஜாரில் உள்ள ரத்னா ஜவுளி கடையில் அவசரத்திற்கு என்று ஒரு பனியன் வாங்கிகொண்டு திரும்பும்போது எதிர் கடையில் தொ.ப.உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டேன்.ரொம்ப தளர்ந்திருந்தார்.பார்த்து ஏழெட்டு மாதங்கள் இருக்கும்.அவரை கடந்து போக முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அவரிடம் பேச புது புது விசயங்கள் நிறையவே இருக்கும்.அவரிடம் உள்ள விஷேச பண்பு என்பதே அது தான் .அரை மணி நேரத்தில் அது வரை கேட்டிராத அறுபது விசயங்களை சொல்லி விட்டு போய்  விடுவார். நான் ஹெல்மெட் போட்டிருந்ததால் உடனடியாக அவரால் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.கவசத்தை கழட்டியதும் என்னை பார்த்து உற்சாகமாக கை அசைத்து வரவேற்றார்..
"ச்சே..இவ்வளவு நாளா சந்திக்காம இருந்துட்டமே .."என்று மனசுக்குள் தோன்றியது.ஈழ பிரச்னையில் இருந்து கூடங்குளம் வரை எத்தனையோ மனஸ்தாபங்கள்..கருத்துக்களை வெளிப்படையாய் பேச ஏற்பட்ட தயக்கம் தான் இந்த இடைவெளிக்கு காரணம் ...

தஞ்சை தமிழ் பல்கலைகழகம் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பதவி காலம் கடந்த மாதம் முடிவடைந்தது என்பதை கூறியவர், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நடந்த முக்ய சம்பவங்களை நினைவுகூர்ந்தார்...இந்த நேரத்தில் கவிஞரும் நடிகருமான திரு.அருணா சிவாஜி அவர்கள் அந்த பக்கமாக வந்தவர் எங்கள் பேச்சில் இணைந்துகொண்டார்.வெளியூருக்கு சென்று பேச மனசு விருப்பபட்டாலும் உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது என்று வருத்தப்பட்டார்.அவரது குருநாதர் சி.சு.மணி நினைவு சொற்பொழிவு கூட்டம் ஒன்று வரும் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு நடக்கிறது வாருங்கள் என்று அழகான ஒரு அழைப்பிதழ் கொடுத்தார்.ரொம்ப பேர் வேண்டாம். ஒரு பத்து பதினைந்து பேர் போதும் என்றார். பாளையம்கோட்டை பற்றிய ஒரு நூல் எழுதி கொண்டு இருக்கிறேன்..முனைவர் நவநீதன் உள்ளிட்ட சில நண்பர்கள் நான் சொல்ல சொல்ல எழுதிக்கொண்டு வருகிறார்கள் என்று போகிறபோக்கில் ஒரு முக்கிய செய்தியை சொன்னார்..நானும் வேண்டுமானால் வந்து தங்களுக்கு உதவுகிறேன் என்று சொன்னேன்.பேச்சு எங்கெங்கோ சென்றது..பை பாஸ் ஆபரேஷன், மாத்திரை,மருந்து என்று எங்கள் சொந்த பிரச்னைக்கு வந்து சேர்ந்தோம்.கால் வலி தீராத வலியாக இருக்கிறது என்று வருத்தப்பட்டார். அம்னீசியா நோய் போல சில சமயங்களில் எதிரே இருப்பவர் பேர் மறந்து போய்  விடுகிறது என்று சொன்னவுடன் எதிரே இருந்த சிவாஜி "அய்யா ..நான் யார் என்று தெரியுதா ..?:என்று பதட்டத்துடன் கேட்டார்.
"நீங்க அருணா சிவாஜி தான .." என்று தொ.ப.அவர்கள் சிரித்ததும் தான் அவருக்கு கொஞ்சம் திருப்தி வந்து சேரில் சாய்ந்து உட்கார்ந்தார்.
தொ.ப.என்றாலே அவரது ஞாபக சக்தி தான் நினைவுக்கு வரும்..தான் படித்த அதனை புத்தகங்களையும் எழுதிய ஆசிரியர் முதற்கொண்டு நினைவாய் சொல்வார் அவர்..

பேச்சு குடும்ப விசயத்துக்கு திரும்பியது.பையன் இப்ப என்ன வருஷம் படிக்கிறார் என்றார்.அவன் வேலைக்கு போய்  ஒரு வருஷம் ஆகிறது என்று சிரித்தேன்.
அட ..நாம சந்தித்து அவ்வளவு நாள் ஆகி விட்டதா என்று அவரும் சிரித்தார்.கோயம்புத்தூர் ல metallurgical engineering  தான படிச்சான் என்றார்.நல்லவேளை அம்னீசியா வேலை செய்யவில்லை என்று நினைத்துகொண்டேன்.அவன் கோவை P .S .G .T e c h  கல்லூரியில் இந்த பிரிவு எடுத்து இருக்கிறான் என்றவுடன் உலோகவியல் முக்யமான படிப்பு என்று பாராட்டியது இப்போதும் நினைவில் ஓடியது.

அவர் நெல்லை வந்தால் பார்த்து பேசணுமே ...என்றார்.
நான் உடனே பதறிபோய் "என்னய்யா நீங்க..அவன் வந்தா நானே அழைத்து வருகிறேன் உங்கள் வீட்டுக்கு.."என்றேன்.
"ஆதிச்சநல்லூர் மக்கள் பயன்படுத்திய உலோக துண்டுகள்,  இடையங்குளம் மக்கள் உருவாக்கிய இரும்புத்துண்டுகள் எல்லாம் என்கிட்டே இருக்கு..இதை எப்படி அந்த காலத்து மக்கள் உருக்கியிருப்பர்கள் என்று அவரிடம் கேட்டு தெரிஞ்சுக்கணும்..இது சம்பந்தமான வேற சந்தேகங்களும் இருக்கு..அவர்கிட்ட கேக்கணும் ..என்றார்..
வழக்கம்போல எங்களுக்கு தேனீர் வாங்கி கொடுத்தார்..நாங்கள் குடித்தோம்.பின் வழக்கம்போல அவர் சிகரட்டை பற்ற வைத்து கொண்டார்..அருணா சிவாஜி பதறினார்..
ஆபரேஷன் எல்லாம் பண்ணி இருக்கீங்க..சிகரெட் பிடிக்கறது உயிருக்கு ஆபத்தே என்றார்.
சிகரெட் குடிக்காட்டி அவருக்கு இப்ப உடனே ஆபத்து என்றேன்.தொ.ப.சிரித்தார்.
தமிழக அறிவுஜீவிகள் வியந்து பாராட்டும் தொ.ப.என்ற பேராசிரியர்.தொ.பரமசிவன் அவர்கள் எவ்வளவு படித்து இருந்தபோதிலும் தன் முன்னால் வளர்ந்த சிறுவன் ஒருவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது என்று கருதினால், அவரது பண்பு என்னை வியக்க வைத்தது...சந்தேகங்களை எவரிடமும் கேட்டு தீர்த்து கொள்ளலாம் எனும் அவரது வேட்கை அவர் மீதான மதிப்பை மேலும் கூட்டியது..
எனது வண்டியை கிளப்புமுன் அவரை திரும்பி பார்த்தேன்..
சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து கொண்டு இருந்தார்.

"எங்கள்      அன்பிற்குரிய தொ.ப..."

Tuesday, February 25, 2014

oru sakaptham



Done everything ..

Men mayanakkarai back foot wash highly the plastic chairs to sit after a long day seeing the relatives and talking. Female head bath and wet head around where interested students. Few kaikulantai the ittili feeding there. Someone uncle's manavaram .. now the only thing I know is coming. . thiruvaasagattai heart-warming is playing .. aunt, she is sitting in front of the horror of the maze is where the heart is not known .. ..

Seventy Seventy line .. line .. like a shadow over the nerra estranged uncle holding the hand of his married life will be like .. Who? ... Five sons and grandson and granddaughter .. .. puttan seven people, are locked .. everywhere .. This colonial home They come from more than 60 years .. aunt .. long journey might remember her wedding day ... only a minority of the world of life as it is ..


After the ritual would take to go to a box elder. Nayanmars heart melt when the home will be singing songs
An attraction for small children and singing along .. so ..

Pluck the flowers that will bring a lot of prayers for children ..

Hail Hail Nathan Namasivaaya low ..
என்று சொல்லிக்கொண்டு பூக்களை அர்ச்சிக்கும் போது கண் மூடாமல் பார்த்து கொண்டு இருப்பார்கள்.எனக்கும் கூட தேவாரத்தின் சில வரிகள் இப்போதும் மனதில் ஓடி கொண்டு இருக்கிறது என்றால் அது இந்த மாதிரி பூஜையை பார்த்து மனதில் பதிந்தது தான்..

Meditation is a full one and a half hour of prayer Kanagabishekam .. on .. he's reading habits seventy years Nayanmars schoolchildren sang in unison is still olittukkontu ears ..
Nayanmars enough to melt the heart of his death today, they sang songs by heart ennovo ...
Aunt could not imagine how it would be ..
Tomorrow everyone will try to finish their house thing ..
The wooden clock when alone in bed only hear the sound of the moving bristles ..
Keep in mind that acaipota old memories ..
Setu umavum Senthil running with running games .. also .. Kasi kayalum Hariyum crawl away into the back of the watch .. Mala did not know where she has gone? ...
Uncle, is seen playing with a quiet smile and ...

Ramalingam an impressive brick colonial house built with stones Only?









Prayer which goes to town  

Sunday, January 13, 2013

பொங்கும் மனசு...



வானரமுட்டி சிவஞான மாமாவிற்கு ஆறு பொம்பளை பிள்ளைகள் இருந்தாலும் பொங்கல் கறிகள் அவர் தான் செய்வார். வேட்டியை மடித்து கட்டி கொண்டு அடுப்பங்கரையில் அவர் சூடு பண்ணும் காட்சி மனசில் தெரிகிறது. ஒவ்வொரு பொங்கல் கடக்கும் போதும் மாமாவின் முகம் தோன்றி மறையும்.

ரஸ்தாளி கரும்பை யாரும் எடுப்பதில்லை என்பதை அறிந்து அப்பா கரும்பை சிறு கத்தியால் வெட்டி சிறு சிறு துண்டாக தட்டில் போடுவார்."கரும்பை வேஸ்ட் பண்ணாம திண்றீகளா இல்லையா " என்று வேறு சத்தம் போடுவார். பனங்கிழங்கு சாப்பிட யாரும் தயக்கம் காட்டியது இல்லை. நார் உரித்து எப்படி சாப்பிடனும் என்று கணபதி ஆச்சி  தான் சொல்லுவாள்.இதெல்லாம் இப்ப தான் கிடைக்கும் பொறகு நீ நினைச்சாலும் சாப்பிட முடியாது என்பாள் . பொங்கல் சீசனில் தான் சிறுகிழங்கு, பிடிகிழங்கு,கருணை கிழங்கு, சீனி கிழங்கு சக்கரைவள்ளி கிழங்கு என்று எல்லா கிழங்குகளும் கிடைக்கும்.

அப்பா கோவை சென்ற பிறகு அங்கெ எல்லா காய் கறிகள் கிடைத்தாலும் பொங்கல் நேரத்தில் பனங்கிழங்கு மட்டும் கிடைக்கவில்லை என்று அடிகடி வருத்தபடுவார். அதற்காகவே நான் கோவை செல்லும் பொது பனங்கிழங்கு வாங்கி செல்வது வழக்கம்.

பொங்கல் அன்று மாலையில் பஞ்சாயத்து பள்ளி மைதானத்தில் கபடி போட்டி நடப்பது உண்டு. எந்த விளையாட்டு போட்டியிலும் கலந்து கொள்ளாவிட்டாலும் அதை பார்பதற்கு என்றும் தவறியது இல்லை. சமயங்களில் பொங்கல் பண்டிகையின் போது , தொடர்ந்து ஏழு நாட்கள் சைக்கிள் ஓட்டும் சைக்கிள் கணேசன் வருவது உண்டு.அவன் அந்த ஏழு நாட்களும் சைக்கிளை விட்டு இறங்குவது இல்லை..சாபிடுவது, குளிப்பது எல்லாம் சைக்கிள் ஒட்டியபடி தான்..ராத்திரி கூட இறங்குவது இல்லை என்று கூறுவார்கள். ஒரு நாலு ராத்திரியாவது முழிச்சுருந்து பார்கனும்டே அவன் உண்மையிலேயே ராத்திரி சைக்கிளை விட்டு இறங்குறான இல்லையா என்று என்று நடேச பட்டர் மகன் செல்லகண்ணு கூறுவான்.

பட்டு பாவாடை எங்கே கட்டி வாய்த்த கூந்தல் எங்கே என்ற பிரபலமான எம்ஜிஆர் பாட்டை அவன் அடிகடி பாடியபடி சைக்கிளில் வலம் வருவான். தலை சீவி கூந்தல் முடித்து பூ வைத்து குஞ்சம் வைத்து என என்னனவோ செய்வான் கணேசன்.எழாவது நாள் முடிவில் பொங்கல் வரும் படி பார்த்து கொள்வான் . அன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் பஞ்சாயத்து சேர்மன் கே.பி.கணபதி கலந்து கொண்டு அவனுக்கு பரிசுகள் வழங்குவார்.உள்ளூர் தொழில் அதிபர் கோபாலக்ருஷ்ண யாதவ் அவர்கள் அவனுக்கு பொன்னாடை போர்த்தி கௌவ்ரவபடுதுவார்.

கணேசன்கள் இப்போது எங்கே போனார்கள்? அவன் பிள்ளைகள் படித்து இருப்பார்களா ?

பொங்கலுக்கு அடுத்த நாள் கரிநாள்..அன்று ஓய்வு நாள் எல்லோருக்கும்..முந்தய நாள் சமைத்த பொங்கல் சோற்றையும் கரும்பு கிழங்குகளையும் எடுத்துக்கொண்டு இஷ்டப்பட்ட இடங்களுக்கு சென்று ஜாலி யாக சாபிடுவது வழக்கம் கோவில்பட்டி யில் அப்போது தண்ணீர் கஷ்டம் உண்டு.தண்ணீர் இருக்கும் தோப்பாலம், கதிரேச மலை போன்ற இடங்களுக்கு மக்கள் செல்வது உண்டு. குருமலைக்கு போகலாமா என்று பள்ளி நண்பன் உதயசங்கர் ஒரு முறை சொல்லி போன கதை தனி கதை. முயல் கறி எங்க வீட்டிலே எடுப்பாங்க என்று சொல்லி இருந்தான். முயல் கறி சாப்பிடும் ஆசையில் நான் ,சாரதி மற்றும் உதயசங்கர் எல்லோரும் மறுநாள் குருமலை புறப்பட்டோம். நான் வழக்கம் போல எங்க வீட்டு சம்பா சோறும்,பழங்கறியும் ஒரு தூக்குவாளியில் எடுத்துக்கொண்டு போனேன் எங்களுக்கு முன்னால் சங்கரின் குடும்பம் போய்கொண்டு இருந்தது பேச்சுவாக்கில் அவர்கள் போன வழி மாறி நாங்கள் வேறு எங்கோ சென்று திசை மாறி தவியாய் தவித்து கடைசியில் எல்லோரும் நான் கொண்டு போன சோற்றையும் கரும்பையும் தான்  திங்க முடிந்தது. முயல் கறியை முன்னால் போனவர்கள் சாப்பிட்டு செமித்து இரவு வீடு திரும்பினார்கள். அதன் பின்பு இன்று வரை முயல் கறி சாப்பிட்டதே  இல்லை என்பது வேறு விஷயம்.

இப்போது மக்கள் தொலைகாட்சி முன்பு உட்கார்ந்து சாலமன் பாப்பையா பட்டி மன்றம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் நான் இருக்கும் சாந்திநகர் பகுதியில் பொங்கல் விழாவை இளைஞர்கள் நன்றாகவே கொண்டாடி  வருகிறார்கள். குழந்தைகள் ஏராளமாக கூடுகிறார்கள்.பலூன் உடைத்தல், ஓட்டபந்தயம் ஸ்கிப்பிங் என்று போட்டிகள்..பெரியவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, இளைஞர்களுக்கு பானை உடைத்தல் என பொங்கல் விழா களை கட்டுகிறது..ஆனாலும்  அப்பா நறுக்கி வைக்கும் ரஸ்தாளி கரும்பின் ருசியை நாக்கு தேடுகிறது, அப்போது சாப்பிடா விடினும்.

பொங்கும் மனசு...



மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகை வேறுபட்டது.அது பள்ளி மாணவனாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்லும் குடும்பஸ்தராக இருந்தாலும் சரி, மூன்று நாள் தொடர்ந்தார்போல லீவு என்றால் மனசுக்குள் ஒரு குதூகலம் இருக்கத்தானே செய்யும்? தீபாவளி என்றால் வெடி,மத்தாப்பு, என்று நெருப்போடு சார்ந்த பண்டிகை என்பதால் சற்று கவனமாக கொண்டாட வேண்டும்.பொங்கல் அப்படி இல்லை.வீட்டுக்கு வெள்ளை அடித்து பளிச் சென்று இருப்பதால்,  மனசுக்குள்ளும் அந்த வெளிச்சம் ஏற்படும்.டவுனில் இப்போது யார் ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்கள்? ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு ஒரு முறை டிஸ்டம்பர் கலர் அடிப்பதற்கு மட்டுமே இருபதினாயிரம் ஆயி விடும்.

அந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் வீட்டுக்கு வெள்ளை அடிப்பது என்பது மரபாகவே இருந்து வந்திருக்கிறது. வெள்ளை அடிக்க என்றாலே மூன்று நாட்கள் ஆகி விடும்.வீட்டை ஒழுங்க வைக்க அம்மா படும் பாட்டை சொல்லி முடியாது. பரணில் இருக்கும் பண்ட, பாத்திரங்களை கீழே இறக்கி வைப்பதும் அதை புளியால் நன்றாக விளக்கி கழுவி மீண்டும் மேலே ஏற்றுவதும் மலைப்பான வேலை.அம்மா அதை செய்ய எப்போதும் சளைத்தவள் இல்லை. பழைய பித்தளை பாத்திரங்களோடு எத்தனையோ வேண்டாத பொருட்களும் இருந்தாலும் அம்மா அவற்றை அவ்வளவு எளிதில் கழித்து விடுவது இல்லை. அப்பா திட்டி கொண்டே இருப்பார்.பதவல்களை குறை என்று சொன்ன கேக்குராளா என்று ஏசுவார். ஆனாலும் அம்மா எல்லா பொருட்களையும் சேர்த்து சேர்த்து தான் வைத்து கொண்டு இருப்பாள். இந்த மாதிரி சமயங்களில் தான் நான் எப்போவோ தொலைத்த பென்சில், கோல்டன் கலர் பேனா போன்ற பொருட்கள் கிடைபதுண்டு.வீடு முழுசும் துணிகளும் பெட்டிகளும் இறைந்து கிடக்கும் காட்சி இப்போதும் நினைவில் உள்ளது.நானும் கணபதி அக்கா, செம்பகவல்லி அக்கா எல்லோரும் எங்களின் பழைய பொருட்களை தேடுவதிலேயே குறியாய் இருப்போம்.

வெள்ளை அடித்து முடியும் போது வீடு புதிய பொலிவுடன் காட்சி தரும்.அம்மா ரெண்டு நாளைக்கு படுத்து கொள்வாள். பொங்கலுக்கு ரெண்டு நாட்களுக்கு முன் காவி கரைத்து வாசல் படிகளுக்கு காவி பட்டை அடிப்போம்.அம்மா, அக்காக்கள் எல்லோரும் கோலம் போடுவதில் மும்முரமாக இருப்பார்கள்.அது பெண்களுக்கான வேலையாம். அதற்காகவே அக்கா ரெண்டு பெரும் வீரபத்திரன் டாக்டர் வீட்டில் உள்ள ஜானகி அக்காவிடம் ரெண்டு வாரத்துக்கு முன்பே பதினாறு புள்ளி கோலம், பத்தொன்பது புள்ளி கோலம் என்றெல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள். பொங்கலுக்கு கரும்பு வாங்க அப்பாவுடன் நான் மட்டுமே பெரும்பாலும் செல்வதுண்டு.இருப்பதில் நான் தான் கடைக்குட்டி என்பதால் இந்த பொறுப்பு. எதிர் வீட்டு கண்ணன் வாங்கும் கரும்பு நீண்டு ஒரு கணுக்கும் இன்னொரு கணுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கும்.கடித்து தின்பது எளிதாக இருக்கும். ஆனால் அப்பா வாங்கும் கரும்பு ரஸ்தாளி கரும்பாய் இருக்கும்.கணுக்கள் நெருக்கமானதாக இருக்கும் அந்த கரும்பு சாப்பிட எனக்கு பிடிக்காது. ஆனாலும் அப்பா அந்த கரும்புகளை தான் வாங்குவார்.வீட்டிலே மொத்தம் ஏழு டிக்கெட்டுகள் இருந்தாலும் அப்பா ரெண்டு கரும்புகள் தான் வாங்குவார். கரும்பு சாபிடுவதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

மஞ்சல்குலையும் பனங்கிழங்கும் பச்சை காய்கறிகளும் பார்த்து பார்த்து அப்பா வாங்குவார்.காய் வாங்குவதில் அப்பா சில பழக்கங்களை வைத்திருப்பது வழக்கம்.முதலில் தேங்காய்.பின்பு கிழங்கு வகைகள், பச்சை காய் கறிகள், அதற்கு மேல் தக்காளி போன்ற பழ வகைகள் என்று பையின் மேல் போட வசதியாய் வாங்குவார். அப்பா ஒரு பையும் நான் ஒரு பையுமாய் வந்து சேரும் போது வீட்டிலே கோலம் போடும் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கும்.

அப்பா வருவதற்குள் எவ்வளவு அதிகமாய் கோலங்கள் போடா முடியுமோ அவ்வளவு அதிகமாய் போட முயற்சி பண்ணுவார்கள். வீடு நிறைய கோலங்கள் மணிகணக்கில் போட அப்பா விரும்புவதில்லை. அம்மா பொங்கல் கட்டிகளை காவியால் மெழுகி சுண்ணாம்பு நீரால் பட்டை அடித்து கொண்டு இருப்பாள். செண்பகவல்லி அக்கா சிறு வீட்டு பொங்கல் விட களி மண்ணால் சிறு வீடு கட்டிக்கொண்டு இருப்பாள் .அண்ணன் குமரகுரு அதை அழகுபடுத்தி கொண்டு இருப்பான். மணி அண்ணன் எல்லோருக்கும் மேலாக ஆலோசனை சொல்லி கொண்டு இருப்பான். தெருவே உற்சாகமாக இருக்கும். இந்த மாதிரி நேரங்களில் பாடம் எதுவும் படிக்க வேண்டாம் என்பதே எங்களுக்கு மேலும் தெம்பூட்டும்.

அங்கெ இங்கே சுற்றி கொண்டு இருந்தாலும் அப்பா என்னை விடுவது இல்லை. "எல ..அந்த பருத்தி மாரு கட்ட எடுத்து பிரிச்சு போடு..காலைலே அம்மா அடுப்பு பத்த வைக்க ஈஸியா இருக்கும் " என்பார்.அம்மா காலைலேயே எழுந்து குளித்து ஈர துணியுடன் அடுப்பு பத்த வைப்பாள். புகை மண்டலத்துக்கு நடுவே அம்மா உட்கார்ந்து குழல் ஊதி கண்களை கசக்கியபடி பொங்கல் இடுவாள்.

சூரியன் வருமுன்பே பொங்கல் பொங்கி விடும்..அம்மா குலவை  இடுவாள். அம்மாவுக்கு பிறகு இப்போது யாரும் குலவை  இட்டு பார்த்தது இல்லை.வாழை இலையில் அம்மா படையல் இட்டு காக்காவிற்கு தனியாக இடுவாள். மதியம் சாப்பாட்டிற்கு எல்லா காய்களும் வைத்து அவியல்,போரியல், கூட்டு பச்சடி வைக்க வேண்டும்.அம்மா எதையும் சுமையாய் நினைத்தது இல்லை. காய் வைக்கும் போது எங்களுக்கு வானரமுட்டி மாமா ஞாபகத்துக்கு வரும். சிவஞான மாமா பொங்கல் கறிகளை அவரே கிண்டி பழங்கறியாக சூடு பண்ணுவார்...(தொடரும் )

Saturday, June 16, 2012

எனது ஆசிரியர் ..1


பாளையம்கோட்டைஅன்புநகர் பக்கம் செல்லும்போது எல்லாம் அந்த வீட்டின் முன் பலவிதமான இரு சக்கர வாகனங்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்தபடி செல்வேன். அவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டுசன் எடுக்கிறார் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.நூற்றுகணக்கான மாணவர்களும் மாணவிகளும் காலை மாலை ரெண்டு வேலையும் அங்கே சங்கமிக்கிறார்கள்.அவரிடம் படித்தால் இருநூறு மதிப்பெண்கள் உறுதியாய் எடுக்கலாம் என்ற நம்பிக்கை ...இத்தனைக்கும் அவர் வயதில் மூத்தவரும் அல்லர்.சுமார் முப்பத்து ஐய்ந்துக்குள் தான் இருக்கும். ஒரு வருடத்திற்கு சுமார் ஐயாயிரம் முதல் ஆறாயிரம் வரை ஒரு மாணவருக்கு வாங்குகிறார் என்று கேள்வி.

நான் பள்ளியில் படித்த காலத்தில் மகாதேவன் என்று ஒரு அறிவியல் ஆசிரியர் எனக்கு பாடம் எடுத்தார்.அந்த காலத்தில் வகுப்பில் குறைந்தமதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மட்டுமே டுசன் படிக்கும் பழக்கம் இருந்தது. அந்த வகையில் அவரும் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு டுசன் சொல்லி கொடுத்தார்.அவர் வீட்டு மாடியில் இருக்கும் அறையில் வைத்து சொல்லி தருவது வழக்கம்.அவர் அறிவியல் ஆசிரியர் என்ற போதிலும் ஆங்கில பாடமும் நடத்துவார். வகுப்பில் தெளிவாய் ஒவ்வொன்றையும் இருமுறை சொல்லி விளக்குவார். ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களையும் கரும்பலகையில் எழுதிபோடுவார். டுசன் படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக இன்னொரு முறை விளக்குவார்.அவர் விளக்கம் கொடுக்கும் முறையில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் யார் யார் எல்லாம் அவரிடம் டுசன் படிக்கிறார்கள் என்பதை.

அப்போது எல்லாம் பதினொன்றாம் வகுப்பு தான் பொது தேர்வு. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர் பாடம் எடுக்கும் சிரத்தை அலாதியானது.முந்தய மூன்று ஆண்டுகளின் வினாத்தாள்களை எடுத்து வைத்து கொண்டு இந்த ஆண்டு எது வர வாய்ப்பு உள்ளது என்பதை ஆய்வு செய்து அது போன்ற வினாக்களை தேர்வு செய்வார்.அதை எல்லா மாணவர்களும் திரும்ப திரும்ப போட்டு போட்டு பார்க்க வைப்பார்.இந்த விசயத்தில் பாரபட்சம் இன்றி எல்லா மாணவர்களையும் அவர் படிக்க வைப்பார். பைடு பைபர் என்ற ஒரு கதை உண்டு. அது இந்த ஆண்டு பத்து மார்க் வினாவில் வரும் என்பதை உறுதியாய் அறிந்து கொண்டு அந்த கதை சுருக்கத்தை அருமையான எளிமையான ஆங்கிலத்தில் எழுதி போட்டு அதை திரும்ப திரும்ப படிக்க வைப்பார்.

நான் ஒரு முறை எனது ஓதுவார் முடுக்கு சந்து வழியாக வந்து கொண்டு இருந்த போது எனக்கு எதிரே மகாதேவன் சார் வந்து விட்டார். "நாதன், நம்ம முருகேசன் இருந்தா அவன கொஞ்சம் வர சொல்லேன்.."என்று என்னிடம் சொல்லியவுடன் நான் எனது வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்த முருகேசனை அழைத்து சார் கூப்பிடுவதை சொன்னேன்.நான் வெளியே கடைக்கு சென்று திரும்பும் போதும் சாக்கடை நாற்றம் அடிக்கும் அந்த குறுகிய சந்தில் அந்த காலை வேளையில் முருகேசனிடம் ஏதோ கேட்பது தெரிந்தது..கிட்ட வந்ததும் தான் தெரிந்தது அவன் அவரிடம் ஆங்கில பாடம் ஒன்றை ஒப்பித்து கொண்டு இருக்கிறான் என்பது.

"நீ ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில தான் தப்பு விடுகிறாய் ..ஸ்பெல்லிங் கரெக்டா சொல்லு பார்க்கலாம் " என்று அவர் அவனை திட்டுவது தெரிந்தது.என்னை பார்த்தவுடன் அவர் லேசாக சிரித்தபடி "இன்னைக்கு காலாண்டு பரீட்சை ...இங்கிலீஷ் எக்ஸாம் ...இவன் கொஞ்சம் வீக் ..அதான் வந்தேன் " என்று சமாளித்தார்..
"சார் அவன் வீட்டில் சென்று கேளுங்களேன்..வாசலுக்கு வெளியே ஏன் கேட்கிறீர்கள் " என்றேன்.
"வேண்டாம்..வேண்டாம்..அது அவங்க வீட்ல இருப்பவங்களுக்கு தொந்தரவாக இருக்கும்..இங்க பரவா இல்லே ..சமாளிசுகறேன்." என்பார்.உண்மையான காரணம் அது அல்ல என்பது எனக்கும் தெரியும். முருகேசன் தப்பாய் ஒப்பித்தால் சட் டென்று தலையில் ஒரு போடு போடுவார். வீட்டுக்குள் என்றால் அது முடியாது.
மனுஷன் இந்த நாற்றம் எடுக்கும் சந்துக்குள் நின்று கொண்டு டுசன் படிக்கும் ஒரே காரணத்துக்காக அவன் பாஸ் ஆகிவிட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இந்த அதிகாலை வேளையில் வந்து நிற்கிறாரே என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அது மட்டும் அல்ல..மதியம் தேர்வு என்றால் காலை நேரத்தில் சிறுநீர் இடைவேளை நேரத்தில் கூட வகுப்பறைக்கு வெளியே நின்று முருகேசனையோ அல்லது மாரியப்பனையோ ஒப்பிக்க சொல்வது வழக்கம்.இத்தனைக்கும் அவர் அதற்காக வாங்கும் ரூபாய் ஐந்து தான்..
அவன் பாசாகி விட்டால் அவர் முகம் பிரகாசமாகி விடும்..அவரின் நேர்மை எனக்கு இப்போது நினைத்தால் கூட வியப்பை அளிக்கிறது..யாருக்கும் தனது இருத்தல் தொந்தரவு அளிக்க கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பார்..

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை பார்த்துகொண்டு இருந்தபோது வங்கிக்கு வெளியே சிகரட் குடித்தபடி நான் நின்று கொண்டு இருந்தேன்.அப்போது திடீரென்று என் முன் மகாதேவன் சார் தோன்றினார். இதை நான் சற்றும் எதிர்பார்கவில்லை..அவசரமாக சிகரெட்டை கீழே போட போனவனை அவர் சட்டென்று இடை மறித்து , " பரவா இல்ல ...நீ குடிப்பா ..நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..நான் சொல்லாம கொள்ளாம வந்து உன் முன்னால வந்து நின்னா நீ என்ன பண்ணுவ..இங்க ஒரு கல்யாண வீட்டுக்கு வந்தேன்..நீ பாங்க்ல ஆபீசர் ஆயிட்டியா..?" என்றாரே பார்க்கலாம்..

எனக்கு ரொம்ப அவமானமாக போய் விட்டது.வாத்தியார் முன்னால சிகரட் குடித்து விட்டோமே என்று.அன்றே விட்டு தொலைத்து இருக்கலாம்..பை பாஸ் அறுவை சிகிச்சையையும் தவிர்த்து இருக்கலாம்..

மகாதேவன் என்ற அந்த ஆசிரியர் , முருகேசன் என்ற மாணவனுக்கு டுசன் ஆசிரியர் என்று எந்த வகையில் பார்த்தாலும் அவரின் பண்பு எனக்கு இன்னும் பிரமிப்பு ஊட்டுகிறது..

Thursday, June 14, 2012

சங்கரப்ப நைனா



நான் நைனா வை முதன்முதலில் பார்த்தது ஜோதிபாசு சலூனில் தான்.என் அண்ணன் ஆர்.எஸ்.மணியுடன் பஜாருக்கு சென்றிருந்த போது தேவப்ரகாஷ் அண்ணன், பால்வண்ணம்,ஜவஹர் வாத்தியார் இன்னும் பெயர் தெரியாத சில "தோழர்களோடு" சங்கரப்ப நைனா பேசிகொண்டிருந்த காட்சி இன்னமும் மனதில் பதிந்து கிடக்கிறது. நான் எஸ்.எஸ்.எல். சி. படித்துகொண்டிருந்த நேரம்.அவசரநிலை அமுலில் இருந்தது. புதிதாய் தைத்த எனது பேன்ட்,சட்டையை அருகில் இருந்த வீனஸ் தையல் கடையில் வாங்குவதற்காக நான் காத்திருந்தேன்.இருபது நிமிடம் ஆகும் என்றதால் எனது அண்ணன் சைக்கிளை பிடித்தபடி நின்றிருந்தேன்.

தேவப்ரகாஷ் அண்ணன் சத்தமாய் சிரித்து பேசினாலும் சங்கரப்ப நைனா மென்மையாய் சிரிப்பை உதிர்த்தவாறு தலையை பெரிதாய் ஆட்டிகொண்டிருந்தார். அதுதான் அவரது சுபாவம்.வெள்ளை கதர் சட்டையும் வேட்டியும் ஒரு சிலருக்கு மட்டுமே வசீகரத்தை கொடுக்கும். நைனாவிற்கு அந்த வசீகரம் உண்டு.கையில் எப்போதும் வைத்திருக்கும் தீக்கதிர் பேப்பரையோ செம்மலரையோ மடங்கிய நிலையில் பிடித்து கொண்டு கையை நீட்டி பேசும் நைனா தீக்கதிர் நாளிதழின் ஏஜென்ட் என்பதை பின்னாளில் தெரிந்து கொண்டேன்.நைனா கோவில்பட்டி நகரில் இருந்த லக்ஷ்மி மில்லில் பஞ்சாலை தொழிலாளியாக வேலை பார்த்தவர் என்பதையும் காலபோக்கில் தெரிந்து கொண்டேன்.

தேவப்ரகாஷ் அண்ணனுக்கு ஈடுகொடுத்து சிரிப்பதில் வல்லவர் சக்தி பயில்வான். அவர் அடிப்படையில் ஒரு தையல் தொழிலாளி.ஜோதிபாசு சலூனில் இருந்து ஐந்தாறு கடை தள்ளி அவரது கடை இருந்தது.அவரது கடையில் உள்ள தையல் மிசினில் யாரோ ஒருவர் தைத்து கொண்டிருப்பார்.இன்னொருவர் காசா போட்டுகொண்டு இருப்பார்.ஒரு நாள் கூட சக்தி பயில்வான் மிசினில் உட்கார்ந்து பார்த்தது இல்லை.நோடிசும் கையுமாக தான் இருப்பார்.ஆர்ப்பாட்டம், மறியல் என்றால் அவர் முன்னால் நிற்பார்.மே தினம் என்றாலே அவர் நினைவு வந்து விடும். அவரது உடல்பயிற்சி கழக நண்பர்களின் சிலம்பாட்டம் ,தீப்பந்த விளையாட்டு என சாகச நிகழ்ச்சிகள் பார்த்து மெய்சிலிர்த்தது உண்டு. சக்தி பயில்வானிடம் பேசிகொண்டிருக்கும் போது தோழர் லக்ஷ்மனபெருமாள் ஒருமுறை சொன்னார்." உம்ம கிட்ட பேசிட்டு இருந்ததுல முக்யமானத மறந்துட்டேன்..பையன் சட்டைய வீனஸ் டேய்லர் ல வாங்க நினைச்சேன்..கடையை பூட்டிட்டு போய்ட்டானே..."
"ஏன் எங்க கிட்டே சட்டையெல்லாம் தைக்க மாட்டிகளோ " சக்தி தான் கேட்டார்.
"வேய்..உம்மகிட்டே அண்ட்ராயர் வேண்ணா தைக்கலாம்..சட்டையெல்லாம் கொடுத்து ரிஸ்க் எடுக்க முடியுமா "
லக்ஷ்மனபெருமாள் சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்தார்.
தோழர் சக்தி சிரித்து கொண்டார்.அது உண்மைதான்.அவரிடம் சட்டை தைக்க கொடுத்து தீபாவளிக்கு சட்டை வாங்கி போட்டவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன ..மறியலில் கைதாகி சிறை சென்றால் எப்போது வருவாரோ?

ஒரு ஞாயிறு அதிகாலையில் நான் வீட்டில் இருந்து தேங்காய் சில்லு வாங்க வெளியே வரும் போது சங்கரப்ப நைனா அவரது பழைய சைக்கிளுடன் வாசலில் நின்று கொண்டு இருந்தார்." அண்ணன் இருக்குதா " என்று என்னைபார்த்து கேட்டார். "தூங்கறாங்க " என்றேன்.
"தோழரை கொஞ்சம் வர சொல்ல முடியுமா ?" தயக்கத்துடன் கேட்டார்.
நான் அண்ணனை எழுப்பினேன்.சட்டயைபோட்ட்படி வெளியே வந்தான் அவன்.இருவரும் ஏதோ பேசினார்கள்.அண்ணன் சட்டைப்பையில் இருந்து ஐந்தும் பத்துமாக ரூபாய் நோட்டுகளை எடுத்துகொடுத்தான். தீக்கதிர் பேப்பர் ரூபாயாக இருக்கும் என்று நினைத்து கொண்டேன்.அப்பா வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேப்பர் திருத்தி கொண்டு இருந்தார். அண்ணன் வாங்கும் தீக்கதிர் பேப்பரை அப்பா வாசித்து ஒருநாளும் பார்த்தது இல்லை. தினமணி பேப்பர் வராவிட்டால் மட்டும் இந்த பேப்பரை லேசாக பட்டும் படாமலும் புரட்டி பார்ப்பார்." எங்க பொரட்டுனாலும் போராட்ட செய்தியா தான் இருக்கும் "என்பார். நானும் அக்காவும் அன்னக்கிளி சினிமா விமர்சனம் என்ன போட்ருக்கான் என்று தீக்கதிர் பேப்பரை புரட்டுவோம்.

நைனா இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேலையில் அண்ணனை சந்தித்து ரூபாய் வாங்கி செல்வது வாடிக்கையாய் இருந்தது.மனுஷன் கடன் வாங்குதாரோ என்று எண்ணினேன்.ஒரு முறை சைக்கிளில் அவர் பின்னாலேயே சென்று பார்த்தேன்.பால்வண்ணம் வீட்டிற்கு சென்றார்.அவரிடமும் பேசி கொஞ்சம் ரூபாய் வாங்குவது பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.அங்கிருந்து கோவில் மேட்டு பக்கம் இருந்த விஸ்வகர்மா பள்ளி அருகே சென்றார்.தனது நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த ஜவகர் வாத்தியாரிடம் போவது தெரிந்தது.அவரும் தனது சட்டை பாக்கெட்டில் இருந்து சொல்லி வைத்தாற்போன்று ரூபாய் நோட்டுகளை கொடுப்பது பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றேன். என்ன இதெல்லாம் ? மண்டை குடைந்தது.

ஒருமுறை பள்ளி நண்பன் உதயசங்கர் வீட்டிற்கு ஏதோ நோட்டு வாங்க சென்றவன் எனக்கு முன்னால் சங்கரப்ப நைனா தனது ஓட்டை சைக்கிளில் தகர சத்தம் முழங்க மெதுவாய் அழுத்தி சென்று கொண்டிருந்ததை பார்த்தேன்.அவர் சைக்கிள் சக்தி பயில்வான் வீட்டுமுன் நின்றது.அவரது சைக்கிள் ஹான்ட் பாரில் இருந்து ஒரு பெரிய துணி பையை எடுத்தபடி உள்ளே சென்றார்.அவரது மனைவி வரண்டா பக்கம் வந்த போது "இதுல அரிசி, காய்கறி இருக்கு..ரெண்டு நாளைக்கு சமாளிச்சுக்க ."என்று சொல்லியபடி ஒரு சிறிய பையை எடுத்து கொடுத்தார்.அப்போது சக்தி பயில்வான் சிறையில் இருந்தார்.ஒரு மௌனத்துடன் அந்த பையை பெற்றுக்கொண்ட அந்த அம்மா அதே வேகத்துடன் மெதுவாய் சைக்கிளில் அழுத்தும் நைனா வை ஒரு பெருமூச்சுடன் பார்த்துகொண்டிருந்தார்.தனது முந்தானையால் கண்களை துடைத்து கொள்வது தெரிந்தது.
நைனா இப்போது மெயின் பஜார் தாண்டி கடலையூர் ரோட்டிற்கு பக்கவாட்டில் இருந்த சந்தில் நுழைந்து பச்சை பெயிண்ட் அடித்த வீட்டின் முன் நின்றார்.தோழர் ராமசுப்பு அவர்களின் வீடு அது.
"தங்கச்சி .."என்று குரல் கொடுத்தார்.
"யாரு அண்ணாச்சியா .."என்று குரல் கொடுத்தபடி வந்த அந்த அம்மாவின் கையில் அரிசி, காய்கறி அடங்கிய மஞ்சள் பையை கொடுத்தார் நைனா.
"ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போங்களேன் .."பையை வாங்கி கொண்ட அந்த அம்மாவின் வேண்டுகோளுக்காக வீட்டு திண்ணையில் அமர்ந்தார் நைனா.

அவரது பயணம் தொடர்ந்தது.புது கிராமம் பகுதியில் இருந்த இன்னொரு தோழர் வீட்டை பார்த்து அவரது ஓட்டை சைக்கிள் திரும்பியது.எனக்கு இப்போது விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட்டது.எல்லா தோழர்களும் சிறையில் இருக்கிறார்கள்..எமெர்ஜென்சியில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் கம்யூனிஸ்ட் தோழர்களும் கணிசமானவர்கள் சிறையில்.கோழி திருடினேன் ஆடு திருடினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கோரினால் விடுதலை செய்யபட்டார்கள்.அப்படி வெளியே வந்த திராவிட இயக்கத்தினர் ஏராளம்.."இன்குலாப் ஜிந்தாபாத் " முழக்கமிட்டபடி ஆவேசமாய் கர்ஜித்து சென்ற சக்தி, ராமசுப்பு போன்ற செங்கொடி தோழர்கள் எவருக்கும் மண்டியிடாது சிறையில் நாட்களை கழித்தார்கள்.சிறைக்கு வெளியே அவர்கள் குடும்பத்தினர் சாப்பாட்டுக்கு வழிஇன்றி வாடி விடக்கூடாதே என்று சங்கரப்ப நைனா மத்திய தர வர்க்க தோழர்கள் பால்வண்ணம்,ஆர்.எஸ்.மணி, ஜவகர்,கோபால்சாமி போன்ற தோழர்களிடம் ரூபாய் வசூலித்து அவர்களது குடும்பத்தை கண்ணின் மணி போல காத்து வந்தார்.ஒவ்வொரு நாள் காலையிலும் தனது ஓட்டை சைக்கிளை எடுத்துக்கொண்டு தனது சகாக்களின் குடும்பத்திற்கு அரிசியும் காய்கறியும் வாங்கி கொடுத்து சென்று கொண்டிருந்த நைனா வின் கால்கள் சற்றும் ஓய்வு எடுக்கவில்லை.எமெர்ஜென்சி நீடித்த ஒரு வருட காலத்திலும் அவரது சைக்கிளின் தகர சத்தம் கோவில்பட்டி நகரின் புழுதி படிந்த வீதிகளில் கேட்டுக்கொண்டு தான் இருந்தது.

சங்கரப்ப நைனா என்ற மனிதர் வெறும் தீக்கதிர் ஏஜென்டா ? சிறைபட்டிருக்கும் தோழர்கள் குடும்பத்தினர் , இயக்கத்தை ஒரு பொழுதும் பழித்து பேசிவிடக்கூடாதுஎன்று இவர் ஏன் துடித்தார் ? சிறைக்கு வெளியே இருந்தாலும் தினமும் இருபது கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் ஏன் கடந்தார் ..ஏன் உழன்றார் ?கோழி திருடியதாக ஒப்புக்கொண்டால் விடுதலை செய்யபடுவோம் என்று தெரிந்தும் ஏன் லட்சிய வேட்கையோடு சக்தியும், ராமசுப்புவும், வள்ளிநாயகமும் சிறைக்குள்ளே இருந்தார்கள்.?தங்களது குடும்பம் வாடுமே என்ற கவலை ஏன் அவர்களுக்கு ஏற்படவில்லை ?

ஒரு வருஷம் நீடித்த எமெர்ஜென்சி இன்னும் பல வருஷம் நீடித்து இருக்க வாய்ப்புண்டு.அதைப்பற்றி சிறிதும் கவலைபடாமல் கொள்கைக்காக இவர்கள் ஏன் சிறைபட்டிருந்தர்கள்.?
இவர்கள் ஜெர்மனிய நாட்டின் தத்துவ மேதைகள் மார்க்ஸ் எங்கல்சின் மூலதன நூலை கரைத்து குடித்த அறிவுஜீவிகளா?அல்லது மார்க்சிய சித்தாந்தத்தின் மூலக்கூறுகளை முழுவதுமாக உள்வாங்கி கொண்ட மேதைகளா ?
எதுவும் இல்லை..எது இவர்களுக்கு சக மனிதனின் துயரத்தை பரிவுடன் பார்க்க வைத்தது?எது இவர்களுக்கு ஏழ்மையிலும் சமரசமற்ற போராட்டத்தை நிகழ்த்த கற்று கொடுத்தது?
சித்தாந்தத்தை அறிவார்ந்த முறையில் கற்றுணர்ந்து தெளிவு பெற்று ஏற்றுகொள்வது ஒருவகை..
சங்கரப்ப நைனாவின் வாழ்க்கை நெறிகளையும் சக்தி பயில்வானின் லட்சிய நோக்கினையும் பார்த்து உணர்வு பூர்வமாக சித்தாந்தத்தை ஏற்றுகொள்வது இன்னொருவகை..
ஒரு மாபெரும் தத்துவத்தின் அடையாளமாய் வாழ்ந்து காட்டிய சங்கரப்ப நைனாவை நினைக்கும்போது நெஞ்சு பெருமிதத்தில் விம்முகிறது ...

Saturday, June 9, 2012

நான் ஏன் எழுதுகிறேன்

 
நான் ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு என்னால் சட்டென்று பதில் சொல்ல
முடியவில்லை..என்னவாய் இருக்கும் என்றும் யூகிக்க முடியவில்லை.சின்ன
வயசில் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் விளையாட்டு பீரிடில் நொண்டி சாக்கு
சொல்லிக்கொண்டு மரத்தடி நிழலில் உட்கார்ந்து நோட்டு புத்தகத்தில்
எதையாவது படம் வரைந்து கொண்டு இருப்பேன்..என்னோடு உட்காரும் முருகேசன்
என்ற மாணவன் அவனுடைய நோட்டில் என்னை மாதிரியே பட கதை வரைந்து கதை போல
கொண்டு செல்வான்..இத்தனைக்கும் அவன் என்னை விட சுமாராகத்தான் படம்
வரைவது உண்டு..முத்து காமிக்ஸ் போன்ற புத்தகங்களின் பாதிப்பு தான்
அது..என் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கும் சாரதி "ஏல..நீயும் முருகேசன
மாதிரி படக்கதை வரை " என்பான்.நானும் உற்சாகமாக படம் வரைந்து ஹீரோ
எங்கெங்கோ பறந்து போய் எதை எதையோ கொண்டு வந்து சாகசம் செய்வது போல கதையை
நகர்த்தி செல்வேன்..என் அருகிலும் பல நண்பர்கள் அமர்ந்து என்னுடைய
படக்கதையை படிப்பதில் ஆர்வம் கொண்டார்கள். என்னுடைய முதல் படைப்பு என்பது
அது தான்..இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் முருகேசனுக்கு என் மேல்
எந்த பொறாமையும் இல்லாமல் அவனும் என் கதையை வாசிப்பதில் ஆர்வம்
கொண்டிருந்தான் என்பது தான்..சில இடங்களில் சில திருத்தங்கள்
சொல்வான்..அவனை போல நாமும் வரைய வேண்டும் அல்லது எழுத வேண்டும் என்பது
தான் எனது லட்சியமாக இருந்தது..

விளையாட்டு நேரத்தில் கட் அடித்து விட்டு என் அருகில் உட்கார்ந்து கதை
படிக்கும் நண்பர்களின் எண்ணிக்கை வுயர்ந்து கொண்டே போனது..அது ஒரு வகையான
போதை மாதிரி தொத்தி கொண்டது..இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கே
புரிகிறது..உண்மையில் சொல்லபோனால் ஓவியம் தான் எனக்கான தளம் என்று
நினைத்தேன்..

கல்லூரியில் படிக்கும்போது உதயசங்கர், சாரதி, முத்துசாமி போன்ற
நண்பர்களோடு சேர்ந்து மொட்டுக்கள் என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தும்
போது கூட என்னுடைய ஓவியமும் கையெழுத்தும் கைகொடுத்தன..உதயசங்கர்
கவிதையும் கட்டுரையும் எழுதினான்.படித்து பார்த்த கவிஞர் தேவதச்சன் "இந்த
மூவரில் ஒருவன் தேறுவான் " என்று குறிப்பிட்டது இன்னமும் நினைவில்
உள்ளது. அது உதயசங்கரின் கவிதைகளை படித்து பார்த்து சொன்னதாக நினைவு..
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது.எங்கள் எவருக்கும் உதயசங்கரை
பார்த்து எவ்வித பொறாமையும் ஏற்பட்டது இல்லை..ஒரு படைப்பாளியாக எங்களில்
ஒருவரை அவர் ஏற்று கொண்டாரே என்ற சந்தோஷம் தான் தோன்றியது..

துரதிர்ஷ்டம் என்னவெனில் , அதன் பிறகு நான் ஓவியத்தை விட்டு
விட்டேன்..உதயசங்கரும் கவிதையை விடவும் கதை எழுதுவதில் ஆர்வத்தை
காட்டினான்..(நாலைந்து கவிதை தொகுப்பு போட்டிருக்கிறான் என்பது வேறு
விஷயம் ).
தொடர்ச்சியாய் நூலகத்தில் வாசித்ததின் தாக்கம்..செம்மலர், தாமரை,
கண்ணதாசன் போன்ற இதழ்களை படித்து வந்ததின் விளைவாய் நாமும் ஏன் கதை எழுதி
பார்க்க கூடாது என்ற தீராத ஆசை பெருங்கனவாய் மனசில் உருவாகி தொழில் என்ற
சிறுகதையை முதலில் எழுதினேன். ஒரு சிலர் அதை வெகுவாய் பாராட்ட விட்டாலும்
"தொடர்ந்து எழுத்து..உனக்கு கதை வரும் " என்று சொன்னது கூட காரணமாக
இருக்கும்..

ஆனால் தொடர்ந்து எழுதாமல் போனது தான் என்னுடைய துரதிர்ஷ்டம்..!

Saturday, April 30, 2011

சுகாவை எனக்கு பிடிக்கும்

ஆனந்த விகடனில் சுகா மூங்கில் மூச்சு எனும் தொடரை எழுத ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார், திருநவேலி காரர்களுக்கு ஏக சந்தோஷம்.

"அது யாருடே ! நம்ம ஊரைப்பத்தி அப்படியே எழுதுதான்...அருமையா எழுதுதாண்டே ! ஒனக்கு தெரியாமலா இருக்கும்? "

எழுத்தாளர் சங்கத்தில் நீண்ட காலமாக நான் செயல்பட்டு கொண்டு இருப்பதால் எழுத்தாளர் சுகாவை நான் கண்டிப்பா அறிந்து இருப்பேன் என்ற நினைப்பில் பல திருநெவேலி வாசிகள் என்னிடம் உரிமையாய் விசாரிப்பார்கள். உண்மையில் இந்த ஆண்டு ஜனவரி 30 வரை நான் சுகாவை அறிந்திருக்கவில்லை. எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட போது சுகாவின் அப்பா சுகா எழுதிய "தாயார் சன்னதி " என்ற நூலை எனக்கு படிக்க கொடுத்தார்.அன்று இரவே அந்த நூலை வாசித்து முடித்து விட்டேன்.

மனுஷன் என்னமாய் எழுதியிருக்கான். நான் கரிசல்காட்டு மண்ணான கோவில்பட்டியில் பிறந்து வளந்தவன் தான்.எனினும் கடந்த 25 வருசங்களாக தாமிரபரணி தண்ணியை குடித்து வளர்ந்து விட்டதால் அந்த மண்ணின் வாசம் எனக்கு ரொம்பவே பிடித்துபோய் விட்டது.நெல்லை மண்ணின் ஈரமான மனிதர்களை, பிரியமான ஆச்சிகளை, அவர்களின் இயல்பான வாழ்க்கை முறைகளை இவ்வளவு நுட்பமாக பதிவு செய்துருக்கிறாரே என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. கல்யாணி ஆச்சியை பற்றி அவர் கூறுவதை கேளுங்கள்.


....யாரையுமே நெருக்கமாக பழகுபவர் போலவே தான் ஆச்சியால் சொல்ல முடியும்.ஒருமுறை சொன்னாள்.

"சாவடிபிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குத்தான் அவாள் வந்துருந்தா. ஆனா நான் அவாள அங்க வச்சு பாக்கல. நம்ம மார்க்கெட்ல வச்சுதான் பாத்தேன்.பக்கத்துல போய் கும்பிட்டேன். பச்சபுள்ள மாதிரி சிரிச்சுக்கிட்டே அவாளும் பதிலுக்கு கும்பிட்டா"

தமிழகத்தின் மற்ற பகுதியில் அவாள் என்றால் பிராமணர்களை குறிக்கும் சொல்.ஆனால் திருநேவேலியில் பிரியமானவர்களை மரியாதையுடன் விளிக்கும் சொல்.கல்யாணி ஆச்சி "அவாள்" என்று சொன்னது மகாத்மா காந்தியை.

திருநெல்வேலி சிவசக்தி ரெடிமேடு கடையில் துணி கிழிக்கும் சாமிகொண்டாடி அருணாசலம் பிள்ளை, திருமண துப்பு சொல்லும் பிரியமான வீரையன் தாத்தா, நடிகை விஜலலிதாவின் பரம விசிறி பிரம்மநாயகம் தாத்தா , விஞ்சைவிலாஸ் கைலாசம் பிள்ளை , எப்போதும் பவுடர் பூசியிருக்கும் கிரிஸ்டி டீச்சர், பொருட்காட்சியில் "ராட்டுல" சுத்தி அவஸ்தை பட்ட சுந்தரம்பிள்ளை பெரியப்பா , இளம்பிராய காதலி சந்திரா ...என எத்தனை விதவிதமான மனிதர்களை நமக்கு அறிமுகபடுத்துகிறார்..!

படிக்க படிக்க அப்படியொரு இன்பம் மனசுக்குள் ஊற்றாய் பெருகியது.
உண்மையில் இப்படியொரு பிரியத்துடன் திருநெல்வேலியில் மட்டும்தான் இத்தகைய மனுசர்கள் இருப்பார்களா? மதுரையிலோ கோவையிலோ ஈரோட்டிலோ அல்லது ராமநாதபுரத்திலோ உள்ள மனுஷர்களின் வாழ்க்கையிலும் இது போன்ற ஈரமான பக்கங்கள் இருக்கும்தானே ? இருக்கும். கண்டிப்பாக இருக்கும்.நான் படிக்காமல் கூட இருந்திருக்கலாம்.

வண்ணதாசனின் அருமையான முன்னுரை மனசை ரொம்பவே இளக வைக்கிறது. ஓவியர் பொன்.வள்ளிநாயகத்தின் அற்புதமான கோட்டோவியங்கள் புத்தகத்துக்கு மேலும் பொலிவூட்டுகிறது.

படித்து முடித்ததும் நாற்பது ஆண்டுகள் டவுன் அம்மன் சன்னதி தெருவில் குடியிருந்த உணர்வு ஏற்பட்டது. இவரது பல கதாபாத்திரங்கள் நான் சந்தித்தவர்கள்.அறிந்தவர்கள்.சுகாவை தவிர.

சொல்வனம் வெளியீடான தாயார் சன்னதி டிசம்பர் 2010 இல் வெளியானது.
மறுநாள் காலையில் அவரது அப்பாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

"என்கிட்ட பேசினது எல்லாம் சரிதான்.அவனுக்கு ஒரு கடுதாசி எழுதி போட்டுரு.குறிச்சிக்கோ அவன் முகவரியை .."என்றபடி அவரது முகவரியை தந்தார்.

நெல்லைக்கண்ணன் அண்ணாச்சி ! மன்னிச்சுக்குங்க ..இன்னமும் உங்க பையனுக்கு நான் கடுதாசி எழுதல..எதை எழுத..எதை விட..என்று மனசு அடிச்சுக்குது..எப்படியும் எழுதிவிடுவேன் "